தெலுங்கானாவில் மேலும் ஒரு பெண் சடலம் எரிந்த நிலையில் மீட்பு

dttamil

ஐதாராபாத்,

தெலுங்கானாவில் சம்ஷாபாத் பகுதியில் மற்றொரு பெண்ணின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாவட்டம் சம்ஷாபாத் பகுதியில் கால்நடை மருத்துவரான 26 வயது இளம்பெண், பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து  கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் முகமது ஆரீப், ஜொள்ளு சிவா, ஜொள்ளு நவீன் மற்றும் சின்டகுன்டா சென்னகேசவலு ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த அதிர்ச்சி சம்பவத்தின் சுவடுகள் மறைவதற்குள், பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்ட இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் மற்றொரு பெண்ணின் உடலும் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த இரண்டு கொலைகளுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்பு

ஐதாராபாத், தெலுங்கானாவில் சம்ஷாபாத் பகுதியில் மற்றொரு பெண்ணின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாவட்டம் சம்ஷாபாத் பகுதியில் கால்நடை மருத்துவரான 26 வயது இளம்பெண், பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து  கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முகமது ஆரீப், ஜொள்ளு சிவா, ஜொள்ளு நவீன் மற்றும் சின்டகுன்டா சென்னகேசவலு ஆகிய 4 பேர் கைது […]

You May Like

Subscribe US Now