10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கீடு

dttamil

சென்னை,

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு கூடுதலாக அரை மணி நேரம் அதிகரித்து தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

10, 11, 12-ம் வகுப்பு  பொதுத்தேர்வு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடக்கும். பொதுத்தேர்வு எழுத மாணவ-மாணவிகளுக்கு 2.30 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணி நேரம் அதிகரித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  தேர்வு எழுத ஏற்கனவே உள்ள 2.30 மணி நேரத்துடன் கூடுதலாக அரை மணி நேரம் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்டத்தால் தேர்வு எழுத கூடுதல் நேரம் தேவைப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

தேர்வு எழுதுவதற்கான கூடுதல் நேரம் நடப்பு கல்வியாண்டிலேயே ஒதுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.  மேலும் தீபாவளி பண்டிகையின் போது, பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்த தலைமை ஆசிரியர்களுக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தமிழகத்தில் கனமழை: முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

சென்னை, 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு கூடுதலாக அரை மணி நேரம் அதிகரித்து தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 10, 11, 12-ம் வகுப்பு  பொதுத்தேர்வு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடக்கும். பொதுத்தேர்வு எழுத மாணவ-மாணவிகளுக்கு 2.30 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.  இந்நிலையில் 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணி நேரம் அதிகரித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  தேர்வு எழுத ஏற்கனவே […]

Subscribe US Now