நள்ளிரவில் வெடித்த ஏ.சி.! குடும்பத்தோடு பலியான காவலாளி.!

ரியாத்,

ஏ.சி. வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் காவலாளி தனது குடும்பத்தோடு உயிர் இழந்தார்.

சவுதி அரேபியா ரியாத் மாகாணத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள வீட்டில் முகம்மது ஷ்ராகெலி வசித்து வந்தார். இவரது 27 வயதில் அழகிய மனைவியும், இந்த தம்பதியருக்கு அதாரி (வயது 5), அபாடி (3) மற்றும் அலி என 3 குழந்தைகள்.

அலி ஒன்றரை வயது பச்சிளம் பாலகன். ஷ்ராகெலி அருகில் உள்ள பகுதியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. அன்றைய தினம் தனது குடும்பத்தோடு ஷ்ராகெலி, இரவு தூங்கி உள்ளார்.

அப்போது வீட்டில் இருந்த ஏசி வெடித்து வீடெங்கிலும் புகை மூட்டமாக காட்சியளித்துள்ளது. இந்த நிலையில் வீட்டின் கதவை திறக்க ஷாராகெலி முயற்சித்துள்ளார்.

ஆனால் அவரால் முடியவில்லை. இந்த நிலையில் அதிகாலை 3 மணிக்கு ஷ்ராகெலி வீட்டில் இருந்து தீ புகை வெளியேறுவதை அக்கம் பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் அங்கு சென்று கதவை திறந்து பார்த்த போது, ஷ்ராகெலி உள்பட அவர்களின் குடும்பமே தீயில் கருகி கிடந்தது. ஷ்ராகெலி மட்டும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு கிடந்தார்.

இந்த நிலையில் அவரும் மரணத்தை தழுவினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏசி வெடித்து குடும்பமே பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

dttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *