அம்மா விளையாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

dttamil

சென்னை,

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையில் அம்மா விளையாட்டுத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

கிராமங்களில் உள்ள இளைஞர்களின் ஆரோக்கியம் மற்றும் மன வளத்தை மேம்படுத்தவும், கூட்டு மனப்பான்மையை உருவாக்கவும், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கவும், அதை வெளிக்கொணரவும் 2019-20 ஆண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து 12,524 கிராம ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் ரூ.64 கோடியே 35 லட்சம் மதிப்பில் ’அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்’ செயல்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில்  அறிவித்தார்.

சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அறிவித்த 4 நாளில், சென்னை தலைமை செயலகத்தில் காணொளி காட்சி மூலம் அம்மா விளையாட்டுத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கிளாய் ஊராட்சி மைதானத்தில் இளைஞர் விளையாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சுட்டுக்கொல்லப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடியை வழங்கினார் முதல்வர் 

சென்னை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையில் அம்மா விளையாட்டுத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். கிராமங்களில் உள்ள இளைஞர்களின் ஆரோக்கியம் மற்றும் மன வளத்தை மேம்படுத்தவும், கூட்டு மனப்பான்மையை உருவாக்கவும், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கவும், அதை வெளிக்கொணரவும் 2019-20 ஆண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து 12,524 கிராம ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் ரூ.64 கோடியே 35 லட்சம் மதிப்பில் ’அம்மா இளைஞர் விளையாட்டுத் […]

Subscribe US Now