ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு 200 கிலோ எடை வரை தாங்கும் பிரத்யேக படுக்கைகள்

டோக்கியோ,

ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்காக மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை கொண்டு பிரத்யேகமாக படுக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 24-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ளநிலையில் அதில் பங்கேற்கும் வீரர்களுக்காக தயாரிக்கப்பட்ட படுக்கைகள் ஊடகங்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டன.

இந்த ஆண்டு ஒலிம்பிக் தடகள கிராமத்தில் படுக்கைகளின் பிரேம்கள், மிக வலுவான அட்டைகளால் தயாரிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. காட்சிப்படுத்தப்பட்ட படுகைகளை காட்டி பேசிய ஒலிம்பிக் தடகள கிராமத்தின் பொது மேலாளர் தகாஷி கிட்டாஜிமா, இந்த பிரத்யேக படுக்கைகள் 200 கிலோ வரை எடை தாங்க கூடியது.

நிச்சயமாக எந்த தடகள வீரரும் 200 கிலோ எடை இருக்கப்போவதில்லை என குறிப்பிட்டார். இவை மர படுக்கைகளை விட வலிமையானவை. வீரர்கள் பதக்கங்களை வென்ற பிறகு அறைக்கு திரும்பிய பிறகு பயங்கர கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள். அப்போது படுக்கையின் மீது ஏறி குதிக்கும் சம்பவங்களும் நடக்கும்.

படுக்கையை மரத்தால் அமைத்தால் நிச்சயம் வீரர்கள் குதிக்கும் குதிக்கு அது தாங்காது என குறிப்பிட்டார்.

ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்பவர்களுக்காக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானப்பணி டிசம்பரில் நிறைவடைந்தது. ஜூலை 24ம் தேதி ஒலிம்பிக், ஆகஸ்ட் 25 ஆம் தேதி பாராலிம்பிக்ஸ் போட்டிகள் துவங்க உள்ளன.

dttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *