போராட்டக்காரர்களை சிறைக்கு அனுப்பியதற்கு யோகி ஆதித்யநாத் மன்னிப்பு கோர வேண்டும்: மாயாவதி

புதுடெல்லி,

எந்தவொரு முறையான விசாரணையும் இன்றி போராட்டக்காரர்களை சிறையில் அடைத்ததற்காக யோகி ஆதித்யநாத், பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மாயாவதி தெரிவித்துள்ளார்.

 பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உத்தரபிரதேச அரசிடம் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் போராட்டக்காரர்களை முழுமையான விசாரணை இல்லாமல் சிறையில் அடைத்ததற்காக யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:-
‘உத்தர பிரதேச மாநிலத்தில், குறிப்பாக பிஜ்னோர், சம்பல் மீரட், முசாபர்நகர், ஃபிரோசாபாத் மற்றும் பிற மாவட்டங்களில், சி.ஏ.ஏ./ என்.ஆர்.சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ததற்காக விசாரணையின்றி  அப்பாவி மக்கள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினை ஊடகங்களிலும் எழுப்பப்பட்டுள்ளது. இது மிகவும் வெட்கக்கேடானது மற்றும் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு எந்தவொரு முறையான விசாரணையும் இன்றி போராட்டக்காரர்களை சிறையில் அடைத்துள்ளது. இதற்காக பொதுமக்களிடம் மன்னிப்புகோர வேண்டும். மேலும் போராட்டத்தின்போது கொல்லப்பட்டவர்கள் குடும்பத்திற்கு நியாயமான நிதியுதவி வழங்க வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி மக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
போராட்டங்களின் போது ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து சுமார் 1,200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 5,558 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சி  திங்கட்கிழமை ஆளுநர் ஆனந்திபென் படேலை சந்தித்து மாநிலத்தில் நடந்த மோதல்கள் குறித்து நீதி விசாரணை கோர உள்ளதாக தெரிவித்தார்.

dttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *