பூக்களின் விலை கிடுகிடு உயர்வு..!

dttamil

சென்னை,

தொடர்மழை காரணமாக பூக்களின் வரத்து குறைந்ததாலும், முகூர்த்த சீசன் என்பதாலும் கோயம்பேடு, மாட்டுத்தாவணி உள்ளிட்ட பூ மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ மல்லிகைப் பூவின் விலை மூவாயிரம் ரூபாயை எட்டியுள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் கடந்த வாரம் 800 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப்பூ மூவாயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. கிலோ 600 ரூபாய்க்கு விற்பனையான கனகாம்பரம் மூவாயிரம் ரூபாய்க்கும், பிச்சிப்பூ 600 ரூபாய்க்கும், செவ்வந்தி 200 ரூபாய்க்கும், கேந்தி 100 ரூபாய்க்கும், சம்பங்கி 150 ரூபாய்க்கும், பட்டன்ரோஜா 200 ரூபாய்க்கும் விற்பனையானது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் ஒருகிலோ மல்லிகைப்பூ ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையானது. கனமழை காரணமாக கடந்த மூன்று நாட்களாக பூக்கள் பறிக்கும் பணி தொய்வடைந்துள்ளதால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது.

இதனால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ மல்லிகை ஆயிரத்து 800 ரூபாய்க்கும், கனகாம்பரம் இரண்டாயிரம் ரூபாய்க்கும், முல்லை 700 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. காக்கட்டான் 800 ரூபாய்க்கும், ரோஜா 300 ரூபாய்க்கும், சம்பங்கி 450 ரூபாய்க்கும் விற்பனையானது.

உசிலம்பட்டி பூ மார்க்கெட்டில்  ஒருகிலோ மல்லிகை இரண்டாயிரம் ரூபாய்க்கும், கனகாம்பரம் ஆயிரம் ரூபாய்க்கும், முல்லை 320 ரூபாய்க்கும், பிச்சி முந்நூறு ரூபாய்க்கும் விற்பனையாகிறது. செவ்வந்தி கிலோ 120 ரூபாய்க்கும், சம்பங்கி 200 ரூபாய்க்கும், பட்ரோஸ் 200 ரூபாய்க்கும், காக்கட்டான் 250 ரூபாய்க்கும், கோழிக்கொண்டை பூ கிலோ 70 ரூபாய்க்கும் விற்னையாகிறது.

சென்னை கோயம்பேடு பூ மர்க்கெட்டில் பூக்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையான கிலோ மல்லிகை இன்று மூவாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோன்று, 500 ரூபாய்க்கு விற்பனையான முல்லைப் பூ கிலோ ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜாதிமல்லி 600 ரூபாய்க்கும், 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட கனகாம்பரம் ஆயிரத்து 500 ரூபாய்க்கும், சம்பங்கி 160 ரூபாய்க்கும், ரோஜா 140 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டுபிடித்த தமிழக பொறியாளர்

சென்னை, தொடர்மழை காரணமாக பூக்களின் வரத்து குறைந்ததாலும், முகூர்த்த சீசன் என்பதாலும் கோயம்பேடு, மாட்டுத்தாவணி உள்ளிட்ட பூ மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ மல்லிகைப் பூவின் விலை மூவாயிரம் ரூபாயை எட்டியுள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் கடந்த வாரம் 800 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப்பூ மூவாயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. கிலோ 600 ரூபாய்க்கு விற்பனையான கனகாம்பரம் மூவாயிரம் ரூபாய்க்கும், பிச்சிப்பூ 600 ரூபாய்க்கும், செவ்வந்தி 200 ரூபாய்க்கும், […]

Subscribe US Now