அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டு கொலை

dttamil

கலிபோர்னியா,

அமெரிக்காவில் கணினி அறிவியல் படித்து வந்த இந்திய மாணவர் சுட்டு கொல்லப்பட்டார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் பெர்னார்டினோ நகரில் கலிபோர்னியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் முதுநிலை கணினி அறிவியல் படித்து வந்தவர் அபிஷேக் சுதேஷ் பட் (வயது 25).  இவர் உணவு விடுதி ஒன்றிலும் பகுதிநேர அடிப்படையில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், உணவு விடுதியில் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் பட் கிடந்துள்ளார். அடுத்த ஷிப்டுக்கு பணிக்கு வந்த நபர் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார்.  இதுபற்றி அபிஷேக்கின் குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்து உள்ளார்.

இச்சம்பவம் காலை 11.30 மணி முதல் 12.30 மணிக்குள் நடந்திருக்கும் என கூறப்படுகிறது.  பிரேத பரிசோதனை நடத்த காலதாமதம் ஏற்படும் என்பதனால் இறுதி சடங்குகளை கலிபோர்னியாவில் நடத்த குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தூத்துக்குடியில் நீரில் மூழ்கிய ரெயில் தண்டவாளம்: ரெயில்கள் நிறுத்தம்

கலிபோர்னியா, அமெரிக்காவில் கணினி அறிவியல் படித்து வந்த இந்திய மாணவர் சுட்டு கொல்லப்பட்டார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் பெர்னார்டினோ நகரில் கலிபோர்னியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் முதுநிலை கணினி அறிவியல் படித்து வந்தவர் அபிஷேக் சுதேஷ் பட் (வயது 25).  இவர் உணவு விடுதி ஒன்றிலும் பகுதிநேர அடிப்படையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், உணவு விடுதியில் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் பட் கிடந்துள்ளார். அடுத்த ஷிப்டுக்கு பணிக்கு வந்த நபர் […]

Subscribe US Now