சேலம் மாவட்டத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள குட்கா பறிமுதல்

dttamil

சேலம்,

சேலம் மாவட்டம் ஆத்தூரில் வீடு மற்றும் வேனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் வீரகனூர் ராயபுரம் பகுதியில் குமரன் என்பவருடைய தோட்டத்தில் சில மாதங்களாகவே சந்தேகத்திற்கிடமாக வாகனங்கள் வந்து செல்வதாகக் கூறப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு நிறுத்தப்பட்டிருந்த டெம்போ வேனை சோதனையிட்ட போது அதனுள் 34 மூட்டைகள் பான் மசாலா, குட்கா போன்ற பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அந்த வாகனம் நிறுத்தப்பட்டு இருந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 50 மூட்டைகள் மற்றும் 80 அட்டைப் பெட்டிகளில் பான்மசாலா குட்கா ஆகிய பொருட்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இவை தவிர ஒவ்வொரு அட்டைப் பெட்டியிலும் 5 கிராம் எடை கொண்ட வெள்ளிக் காசுகளும் இருந்தன. இந்தப் பொருட்களின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பாக். எதிரான பகல் இரவு டெஸ்ட்: வார்னர் முச்சதம் அடித்து அசத்தல்

சேலம், சேலம் மாவட்டம் ஆத்தூரில் வீடு மற்றும் வேனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் மாவட்டம் ஆத்தூரில் வீரகனூர் ராயபுரம் பகுதியில் குமரன் என்பவருடைய தோட்டத்தில் சில மாதங்களாகவே சந்தேகத்திற்கிடமாக வாகனங்கள் வந்து செல்வதாகக் கூறப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு நிறுத்தப்பட்டிருந்த டெம்போ வேனை சோதனையிட்ட போது அதனுள் 34 மூட்டைகள் பான் மசாலா, குட்கா […]

Subscribe US Now