இந்தியாவுக்கு எதிரான மே.இ. தீவுகள் அணி அறிவிப்பு..!

துபாய்,

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர்களுக்கான மேற்கு இந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுவில் சுற்றுப்பயணம் செய்யும் அந்த அணி டிசம்பர் 6ம் தேதி முதல் 22ம் தேதி வரை 3 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடர்களுக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், இரு தொடர்களுக்கும் கியோரன் பொல்லார்ட் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்ஸ்மேன் ஷாய் ஹோப் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப் ஆகியோர் இருபது ஓவர் தொடரில் நீக்கப்பட்டுள்ளனர்.

பந்தை சேதப்படுத்தி சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிக்கோலஸ் பூரன் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். ஒருநாள் தொடரை பொருத்தவரை, அண்மையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடிய அணியில் இருந்தவர்களே மீண்டும் தேர்வாகியுள்ளனர்.

dttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *