மேல்நிலைப் பள்ளி மாணவர்களுடன் இணைந்து டிரம்ஸ் வாசித்த 5 வயது சிறுவன்

dttamil

லூசியானா,

அமெரிக்காவில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுடன் 5 வயது சிறுவனும் டிரம்ஸ் வாசித்து பலரின் பாராட்டைப் பெற்றுள்ளான்.

அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தில் உள்ள செயின்ட் ஹெலனா ஆர்ட்ஸ் அகாடமியின் விளையாட்டு விழா நடந்தது. அப்போது அங்கு மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் டிரம்ஸ் வாசித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.

அப்போது அவர்களுடன் 5 வயதேயான ஜெரேமியா ட்ராவிஸ் என்ற சிறுவனும் அசத்தலாக டிரம்ஸ் வாசித்தான்.

ஒரு கட்டத்தில் பெரிய மாணவர்கள் இசைகேற்ப அடவு கட்டி நடனமாடிய போது அவர்களைப் போலவே ஜெரேமியாவும் நடன அசைவுகளைச் செய்தது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது. ஜெரேமியா தனது 2வது வயதில் இருந்து டிரம்ஸ் வாசித்து வருவதாக அவனது தாயார் தெரிவித்துள்ளார்

5-year-old plays the drums for a Louisiana high school band

5-year-old Jeremiah Travis is a natural playing the drums in the St. Helena Arts & Technology Academy high school band. 🥁📹: Anastashia Young

Posted by ABC 13 – WSET on Wednesday, 30 October 2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவை சிறுமி பாலியல் வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை உறுதி

லூசியானா, அமெரிக்காவில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுடன் 5 வயது சிறுவனும் டிரம்ஸ் வாசித்து பலரின் பாராட்டைப் பெற்றுள்ளான். அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தில் உள்ள செயின்ட் ஹெலனா ஆர்ட்ஸ் அகாடமியின் விளையாட்டு விழா நடந்தது. அப்போது அங்கு மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் டிரம்ஸ் வாசித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். அப்போது அவர்களுடன் 5 வயதேயான ஜெரேமியா ட்ராவிஸ் என்ற சிறுவனும் அசத்தலாக டிரம்ஸ் வாசித்தான். ஒரு கட்டத்தில் பெரிய மாணவர்கள் […]

Subscribe US Now