கோவை சிறுமி பாலியல் வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை உறுதி

dttamil

புதுடெல்லி,

கோவை சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

கோவையை சேர்ந்த துணிக்கடை அதிபர் ஒருவரின் 10 வயது மகள், 7 வயது மகன் ஆகியோர் 2010-ம் ஆண்டு அக்டோபர் 29-ந்தேதி பள்ளிக்கு சென்றபோது கார் டிரைவர் மோகன்ராஜ் மற்றும் அவரது கூட்டாளி மனோகரன் ஆகியோரால் கடத்தி கொல்லப்பட்டனர். சிறுமியை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொலை செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த இரட்டை கொலை தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மோகன்ராஜ் போலீசாரின் பிடியில் இருந்து தப்பிச்செல்ல முயன்றபோது நடைபெற்ற என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

மற்றொரு குற்றவாளியான மனோகரனுக்கு 2012-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி இரட்டைத் தூக்கு மற்றும் 3 ஆயுள் தண்டனை வழங்கி கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மனோகரன் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டில்  சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

இதை தொடர்ந்து  மனோகரன் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில் மனோகரனுக்கு மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து உள்ளது. மனோகரனின் சீராய்வு மனு தள்ளுபடி  செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அதிமுக பொதுக்குழு வரும் 24ந் தேதி சென்னை வானகரத்தில் கூடுகிறது

புதுடெல்லி, கோவை சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. கோவையை சேர்ந்த துணிக்கடை அதிபர் ஒருவரின் 10 வயது மகள், 7 வயது மகன் ஆகியோர் 2010-ம் ஆண்டு அக்டோபர் 29-ந்தேதி பள்ளிக்கு சென்றபோது கார் டிரைவர் மோகன்ராஜ் மற்றும் அவரது கூட்டாளி மனோகரன் ஆகியோரால் கடத்தி கொல்லப்பட்டனர். சிறுமியை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொலை செய்ததாகவும் கூறப்பட்டது. இந்த […]

Subscribe US Now