முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.50 ஆயிரம் வசூல்

dttamil

மதுரை,

மதுரையில் முகக்கவசம் அணியாத 446 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.49 ஆயிரத்து 800 வசூலிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்று நோய் பாதிப்பிலிருந்து மக்களை விடுவிக்கும்பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் எடுத்துவருகிறார்.

குறிப்பாக, பொது இடங்களில் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று அவர் எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் மதுரை மாநகராட்சி பகுதியில் முகக்கவசம் இன்றி சுற்றித் திரிந்த 316 பேர் மற்றும் கிராமப்புறங்களில் முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரிந்த 130 பேர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவர்களிடமிருந்து 49 ஆயிரத்து 800 ரூபாய் வசூலிக்கப்பட்டது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுக்க, கோவிட்-19 பாதிப்பாளர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 359 ஆக உள்ளது என மத்திய சுகாதார துறை தகவல்கள் கூறுகின்றன.

அதன்படி, 45 ஆயிரத்து 300 பேர் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளனர். தற்போதுவரை 63 ஆயிரத்து 624 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். உயிரிழப்பு மூவாயிரத்து 435 ஆக உள்ளது.

இதையும் வாசிங்க: கோவிட்-19: இந்தூரில் பாதிப்பாளர்கள் 2,850 ஆக அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

டெல்லி குடிசைப் பகுதியில் தீ விபத்து

மதுரை, மதுரையில் முகக்கவசம் அணியாத 446 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.49 ஆயிரத்து 800 வசூலிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்று நோய் பாதிப்பிலிருந்து மக்களை விடுவிக்கும்பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் எடுத்துவருகிறார். குறிப்பாக, பொது இடங்களில் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று அவர் எச்சரித்திருந்தார். இந்த நிலையில் மதுரை மாநகராட்சி பகுதியில் முகக்கவசம் இன்றி சுற்றித் […]
fire-breaks-out-in-delhi

Subscribe US Now