துருக்கியில் மீண்டும் அதிபரானார் எர்டோகன்

dttamil

இஸ்தான்புல்,

துருக்கியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் எர்டோகன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

துருக்கியில் அதிபர் தேர்தல் நேற்று(24-ம் தேதி) நடைபெற்றது. அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் எர்டோகனுக்கும், குடியரசு மக்கள் கட்சியின் மைய இடதுசாரி வேட்பாளரான முஹரம் இன்சுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவி வந்தது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கை உடனே தொடங்கப்பட்ட நிலையில், துருக்கி அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் எர்டோகன் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளார். 

64 வயதாகும் எர்டோகனின் ஆட்சியில், பொதுமக்களின் சுதந்திரம் நசுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், அதிக செல்வாக்குடன் அவர் ஆட்சி செலுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக துருக்கி தேர்தல் ஆணைய தலைமை அதிகாரி சடி குவேன் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, “மொத்தம் பதிவான வாக்குகளில் 97.7மூ வாக்குகள் எண்ணப்பட்டு விட்டன. இதில் எர்டோகன் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளார்” என்று தெரிவித்தார்.

அரசு ஊடகங்கள் எர்டோகன் 52.5 சதவீத வாக்குகளும், முஹரம் இன்ஸ் 31 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஒடிசாவில் வீட்டுக்குள் பாம்புக் குவியல்

இஸ்தான்புல், துருக்கியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் எர்டோகன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். துருக்கியில் அதிபர் தேர்தல் நேற்று(24-ம் தேதி) நடைபெற்றது. அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் எர்டோகனுக்கும், குடியரசு மக்கள் கட்சியின் மைய இடதுசாரி வேட்பாளரான முஹரம் இன்சுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கை உடனே தொடங்கப்பட்ட நிலையில், துருக்கி அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் […]

Subscribe US Now