அபுதாபியில் இந்திய தூதரகத்தின் சார்பில் நடந்த சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி 

அபுதாபி,

அபுதாபியில் இந்திய தூதரகத்தின் சார்பில் 4-வது சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.

அபுதாபியில் இந்திய தூதரகத்தின் சார்பில் உம் அல் எமராத் பூங்காவில் 4-வது சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் நவ்தீப் சிங் சூரி தலைமை வகித்தார். ​அவர் தனது உரையில் யோகா நிகழ்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அமீரக அரசுக்கு தனது நன்றியை தெரிவித்தார். 

​அமீரக சகிப்புத்தன்மைக்கான மந்திரி ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது யோகா பல்வேறு புதிய விஷயங்களில் அதிக கவனம் செலுத்த உதவியாக இருக்கிறது. மேலும் வேறுபாடுகளைக் களைய முக்கிய பங்காற்றி வருகிறது. தனது அமைச்சரகம் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடப்பதற்கு ஆதரவு அளிக்கும் என்றார். 
இந்திய அமீரக உறவுகளை வெளிப்படுத்தும் வகையில் அரபி இசையுடன் கூடிய யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். ​

dttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *